திடீரென உங்கள் நண்பர்கள் போன் செய்து, உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற மெயில்கள் வந்துள்ளதாகவும், அது போல அனுப்ப வேண்டாம் என்றும் சொல்வார்கள். விபரம் தெரிந்த நபர்கள், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, நீங்கள் அனுப்பாமலேயே சில மெயில்கள் வருவதாகக் குற்றம் சாட்டுவார்கள். கனிவுள்ளவர்களோ, இது போல வருகின்றன; உன் கம்ப்யூட்டரை வைரஸ் மற்றும் ஸ்பேம் மெயில், மால்வேர் புரோகிராம் செக் செய்திடச் சொல்வார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் என்ன நடக்கிறது? என்று நீங்கள் விழிப்பீர்கள். ஏனென்றால், நண்பர்கள் குறிப்பிடும் அந்த மெயில் எல்லாம், உறுதியாக நீங்கள் அனுப்பவில்லை என்று தெரியும். ஏன் அது உங்கள் கம்ப்யூட்டரால் கூட அனுப்பப்பட்டிருக்காது. உங்கள் நண்பர்கள் வட்டத்தில் ஒருவரின் கம்ப்யூட்டர் ஸ்பேம் மெயில் அல்லது வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினால் பாதிக்கப்பட்டு, அது உங்கள் இமெயில் அக்கவுண்ட் மூலமாக இந்த ஸ்பேம் மெயில்களை, அட்ரஸ் புக்கில் உள்ள அனைவருக்கு இதனை அனுப்பி இருக்கலாம். அல்லது நீங்கள் அறியாத ஒரு நபர், உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினையே ஹைஜாக் செய்திருக்கலாம்.
முதலில் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை நீங்கள் அணுகித் திறந்து பார்க்க முடிகிறது என்றால், அதன் பாஸ்வேர்டை உடனே இன்னும் கடுமையான பாஸ்வேர்டாக மாற்றவும். உங்களால் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டினை, வழக்கமான பாஸ்வேர்ட் பயன்படுத்தித் திறக்க முடியவில்லை என்றால், உங்கள் இமெயில் அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்பட்டுள்ளது என்று பொருள். யாரோ ஒருவர், உங்கள் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து, பாஸ்வேர்டினை மாற்றி, இது போல ஸ்பேம் மெயில்களுக்கெனப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஒரு சிலர், இது போல இமெயில் ஹைஜாக் செய்த பின்னர், அதன் இமெயிலுக்கு உரியவர் பெயரில், அவரின் உற்ற நண்பருக்கு, தான் டில்லி வந்து மாட்டிக் கொண்டதாகவும், பணம் தேவை எனக்கூறி ஏதேனும் ஒரு அக்கவுண்ட் எண்ணுக்கு பணம் அனுப்ப வேண்டிக் கொள்வார். இதில் அனைத்துமே ஏமாற்று வேலையாக இருக்கும். இது போல இமெயில்கள் ஹைஜாக் செய்யப்படுகையில், உடனே உங்களுக்கு இமெயில் சேவையினை வழங்குபவரைத் தொடர்பு கொண்டு, உடனடியாக உங்கள் அக்கவுண்ட்டினை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்ளவும்.
இலவசமாக இமெயில் தரும் பிரபல நிறுவனங்கள் எனில், அவர்கள் தளத்தில் இதற்கான வழி தரப்பட்டிருக்கும். சில பிரபல இமெயில் அக்கவுண்ட்டில் இது போல ஏற்பட்டால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தள முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
ஜி மெயில்: Click here for Google Mail
யாஹூ: Click here for Yahoo Mail
ஹாட்மெயில்: Click here for Hot Mail
ஆனால், பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட்டில் நுழைய முடியும் என்றால், அந்த அக்கவுண்ட் ஹைஜாக் செய்யப்படவில்லை; ஆனால் உங்களுடைய பாஸ்வேர்டினைப் பயன்படுத்தி யாரோ விளையாடுகிறார்கள் என்று பொருள். உடனே மேலே குறிப்பிட்டபடி, பாஸ்வேர்டினை மாற்றவும்.
{ 0 comments ... read them below or add one }
Post a Comment