பிரபாகரன் மரணம் எப்படி?: விடை தெரியாத கேள்விகள்


விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் சடலத்தை இலங்கை ராணுவம் கண்டுபிடித்துள்ளதை அடுத்து, அவரது மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந் துள்ளன. இலங்கை அரசு தரப்பில் இதற்கு சரியான பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

image

பிரபாகரன் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள்:

* பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்கள் 300 சதுர மீட்டர் பரப்புக்குள் சுற்றிவளைக்கப் பட்டதாக ராணுவம் முன்னதாக தெரிவித்து இருந்தது. ஆனால், தற்போது அவரது சடலம் பாதுகாப்பு வளையப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனின் சடலம் போர் நடக்கும் பகுதியில் இருந்து பாதுகாப்பு வளையப் பகுதிக்கு சென்றது எப்படி?

* கைப்பற்றப்பட்ட சடலம் பிரபாகரனுடையது தான் என, மரபணு சோதனையில் உறுதிப் படுத் தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சடலம் கண்டுபிடிக்கப்பட்ட மிக குறைவான கால அவகாசத்துக் குள் மரபணு சோதனை நடத்தப் பட்டது எப்படி?

* ராணுவத்தின் முற்றுகையில் இருந்து தப்பிச் செல்ல முயற் சிக்கும்போது, பிரபாகரன் கொல் லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தப்பிச் செல்ல முயற்சிக்கும் அவர், புலிகளின் சீருடையில் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

*தப்பிச் செல்லும்போது தன் அடையாள அட்டையையும் அவர் எடுத்துச் செல்வாரா?

*ராணுவத்தினர் பிரபாகரனை பார்த்தபோது அவர் உயிருடன் இருந்தரா?

*ராணுவம் தன்னை பிடிக்க வருவதற்கு முன் தற்கொலை செய்து கொண்டாரா?

*திங்கட்கிழமை பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அவரது சடலம் ஒரு நாள் கழித்து தான் கண்டு பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அது ஏன்?

பிரபாகரன் மரணம் தொடர்பாக இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

{ 0 comments ... read them below or add one }

Post a Comment